பிரபல காமெடி நடிகரை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்… நடிக்க வாய்ப்பு கேட்டால் பணத்தை கொடுக்கிறார் என வேதனை அடைந்த பிரபலம்…..

0
36
Sivakarthikeyan who insulted the famous comedian said that he would pay money if he asked for a chance to act

தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அடிக்கடி தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து விஜய் டிவி பிரபலம் நடிகர் பிளாக் பாண்டி வேதனை தெரிவித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

sivakarthikeyan who insulted the famous comedian said that he would pay money if he asked for a chance to act 02

சில வருடங்களுக்கு முன் வெளியான அங்காடி தெரு, பாகன், கோலி சோடா, சாட்டை, வேலாயுதம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார் பிளாக் பாண்டி. இவர், நடிகராக மட்டுமன்றி மக்களுக்கு பொது சேவை செய்யும் பிரபலமாகவும் உள்ளார். தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர் அடிக்கடி பிரபல யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார்.

sivakarthikeyan who insulted the famous comedian said that he would pay money if he asked for a chance to act 03

இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு முறை சிவகார்த்திகேயனை அணுகியதாக கூறியுள்ளார் பிளாக் பாண்டி. அப்போது அவரிடம் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் பட வாய்ப்பு ஏதேனும் இருந்தால் தருமாறும் கேட்டுள்ளார். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் மேனஜர் தன்னிடம் வந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தாராம். அந்த தொகையை அவரிடமே திருப்பி கொடுத்த பிளாக் பாண்டி, நடிக்க ஏதேனும் வாய்ப்பு கொடுங்கள், காசு வேண்டாம் என கூறியுள்ளார்.

sivakarthikeyan who insulted the famous comedian said that he would pay money if he asked for a chance to act 04

அதன் பிறகு சிவகார்த்திகேயனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் எந்த வித தொடர்பும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமானின் விவாகரத்து விவகாரத்தில் சிக்கினார். இதனால் இவரது பெயர் பெரிதாக மக்களிடையே டேமேஜ் ஆனது. இந்த சமயத்தில் துணை நடிகரான பிளாக் பாண்டியும் இது போல கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.