என்னது ? சிவகார்த்திகேயனின் அயலான் இந்த படத்தின் ரீமேக்கா ?

0
61
Sivakarthikeyans ayalaan copied from hollywood film Paul

இன்று நேற்று நாளை என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தான் ரவிக்குமார். இவர் சிவாகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற பான்டசி படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

Ayalaan Trailer

வழி தப்பி பூமிக்கு வரும் ஏலியனுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதனுக்கும் இடையே நடக்கும் கதை தான் அயலான். சிவகார்த்திகேயன் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஹீரோ. அவர் ஏலியன் கதையில் நடித்திருப்பதால் அயலான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான அயலான் படத்தின் ட்ரைலர் கூட ரசிக்கும் படியாக இருந்தது.

Still from paul

இந்தநிலையில் அயலான் கதை ஹாலிவுட் படத்தின் காப்பி என ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. 2011 ம் ஆண்டு வெளியான பால் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமாம். வேற்று கிரகத்திலிருந்து வலி தப்பு வரும் ஏலியனை கொடூரமான விஞ்ஞானி ஆராய்ச்சி செய்ய நினைக்கிறான். அந்த ஏலியனை இரு நண்பர்கள் காப்பாறுவார்கள்.

Paul movie still

பால் படம் தான் அயலான் என சிலர் கூறுகின்றனர். பால் படத்தின் கதையும், அயலான் படத்தின் டிரைலரும் ஒத்துப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அயலான் படம் வெளியான பின்னர் தான் இது பால் படத்தின் காப்பியா இல்லை வேறு ஏதேனும் கதையா என்பது தெரிய வரும். எது எப்படியோ ஏலியன் படம் என்பது தமிழ் சினிமாவுக்கு புதிய கதை தான்.

Sivakarthikeyan still from ayalaan

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இப்படத்தை விரும்பி பாப்பார்கள். ரவிக்குமார் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருப்பார் என நம்பலாம். டான், பிரின்ஸ், மாவீரன் என சற்று சோர்ந்திருந்த சிவகார்த்திகேயனுக்கு அயலான் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.