நடிகர் பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை…. கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள்…. வெளியான வீடியோவால் கடும் கண்டனம்…!!!

0
11
students sprinkled komiam where actor prakashraj stood
students sprinkled komiam where actor prakashraj stood

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகத்திறமை கொண்டவர் . இவர் நடிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து அதிரடிக் கருத்துக்களை கூறி வருகிறார். இதன்காரணமாகவே பாஜகவினருக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையே ட்விட்டரில் அடிக்கடி மோதல் நடக்கும்.

students sprinkled komiam where actor prakashraj stood
students sprinkled komiam where actor prakashraj stood

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடம் கோமியம் கொண்டு கழுவப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

students sprinkled komiam where actor prakashraj stood
students sprinkled komiam where actor prakashraj stood

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள எம்வி கல்லூரியில் திரையரங்க வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டார்.

students sprinkled komiam where actor prakashraj stood
students sprinkled komiam where actor prakashraj stood

இந்நிலையில், கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தினர். மேலும், மாணவர்கள் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Protesters, including students, objected to #PrakashRaj’s visit for a private event at Sir M Visvesvaraya College of Arts and Commerce in Bhadravathi in Shivamogga, #Karnataka. Following his visit, they allegedly “purified” the campus with #GauMutra. pic.twitter.com/iJeaB0HggM

— Anurag (@LekhakAnurag) August 9, 2023