விடாமுயற்சியால் பரிதவிக்கும் த்ரிஷா…. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கைநழுவும் அபாயம்…????

0
27
Suffering from persistence Trisha is in danger of losing her next film opportunities

தமிழ் சினிமாவில் 90களின் பேவரைட் நாயகியாக இன்றளவும் வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நடிகை திரிஷா. இந்த சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடித்து வெளியான “கொடி” திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்கலில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

Suffering from persistence Trisha is in danger of losing her next film opportunities 02

இந்த சூழ்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் கிடைத்த வரவேற்பு தற்போது மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறும் அளவிற்கு பல முன்னணி நடிகர்களோடு திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suffering from persistence Trisha is in danger of losing her next film opportunities 03

தற்பொழுது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வரும் திரிஷா, கமலின் Thug Life படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் மலையாளத்தில் ராம் மற்றும் ஐடென்டிட்டி என்ற இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.

Suffering from persistence Trisha is in danger of losing her next film opportunities 04

அதிக நேரம் எடுக்கும் காரணத்தினால் தான் கால்ஷீட் கொடுத்திருக்கும் இரு மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றார் திரிஷா என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி பணிகளை முடித்த உடனே, இரு மலையாள பட பணிகளை துவங்குவார் என சொல்லப்படுகிறது.