தனுஷை நேர்ல பாக்கும்போது இதை கட்டாயம் கேட்பேன்…. வெளிப்படையாக பேசிய தமன்னா…!!!

0
16
thamanah interview
thamanah interview

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவான ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் காவலா பாடல் வெளியான நிலையில் அந்த பாடலுக்கு நடனமாடி பலரும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

thamanah interview
thamanah interview

இதற்கு இடையில் நடிகை தமன்னா பாலிவுட் நடிகை விஜய் வருமா காதலித்து வருவதாக ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார் முதலில் கிசுகிசுக்கப்பட்ட இந்த விஷயத்தை தமன்னாவை பேட்டி ஒன்றில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம், நீங்கள் விஜய், அஜித், தனுஷ், சூர்யாவிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன? என்று கேட்டுள்ளார்.

thamanah interview
thamanah interview

இதற்கு பதில் அளித்த தமன்னா, விஜய்யிடம் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்க என்று கேட்பேன். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அஜித் அருமையாக சமைப்பார், படத்தின் ஷூட்டிங்கின் போது எனக்கு இட்லி கொடுத்தார். அந்த மிருதுவான இட்லியை இதுவரை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எப்போ எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? என்று அஜித்திடம் கேட்பேன்.

thamanah interview
thamanah interview

அவர் பைக் ரைட் கூப்பிட்டாலும் போய்விடுவேன். அதுக்கப்புறம் நான் தனுஷிடம் எப்போது மும்பை வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லுவேன். ஆனால் அவர் பண்ணமாட்டார். அதை தான் அவரிடம் கேட்பேன். சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதை அம்சம் குறித்து கேள்வி கேட்பேன் என்று தமன்னா கூறியுள்ளார்.