பாதியில் நின்ற பாலா படம்… வாய்ப்பு கிடைக்காமல் பரோட்டா மாஸ்டரான சாட்டை பட நடிகர்…!!!

0
29
The film actor who is a paratha master, did not get a chance to stop in the middle of the film Bala

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்த பலரும் ஒரு சில காலகட்டத்தில் காணாமல் போன நிலையை கூட அடைந்துள்ளனர். அப்படிபட்ட நிலையில் கைவிடப்பட்ட இளம் ஹீரோக்களில் ஒருவர் தான் 2012ம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த யுவன். சாட்டை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் யுவன் அடுத்தடுத்து கமர்க்கட்டு, இளமை, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

The film actor who is a paratha master did not get a chance to stop in the middle of the film Bala 02

ஆனால் சாட்டை படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு அவர் இத்தனை படங்களில் நடித்துள்ளார் என்ற அடையாளமே தெரியாமல் போனது. இந்நிலையில் இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க யுவன் கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அப்படத்திற்காக நடிகர் யுவன் எடுத்துக்கொண்ட பயிற்சி அனைத்தும் இப்போது அவரின் வாழ்க்கையாகவே மாறியுள்ளது.

The film actor who is a paratha master did not get a chance to stop in the middle of the film Bala 03

தற்போது நடிகர் யுவன் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். அந்த படத்தில் நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் பையன் கேரக்டர். அதனால் நாகூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் வேலைக்கு சேர்ந்து பரோட்டா போட, காய்கறி நறுக்க, டீ போட கற்றுக்கொண்டேன். கடையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர பப்ளிக் யாருக்குமே நான் யார் என்பது தெரியாது.

The film actor who is a paratha master did not get a chance to stop in the middle of the film Bala 04

பெரிய டி ஷர்ட் ஷார்ட்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு அந்த கடையில் வேலை செய்யும் பரோட்டா மாஸ்டர் போலவே இருந்தேன். படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் தேதியின் அறிவிப்பு வரை வந்தது. ஆனால் அதற்கு முன்னரே படம் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்கள். பின்னர் நாச்சியார் படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது முடிந்த பிறகு மீண்டும் இந்த படத்தை எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அப்படம் ட்ராப் செய்யப்பட்டதாக சொல்லிவிட்டார்கள். அது எனக்கு வேதனையை அளிக்கிறது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.