ஹனுமான் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பத்தால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

0
31
The girl who went to the theater to watch the film Hanuman is shocked by the sudden incident

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் “ஹனுமான்” படம் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு சங்கராந்தி அன்று வெளியானது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தற்போது படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் தொடர்ந்து அந்த படத்தை மக்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இத்திரைப்படம் வட இந்தியாவில் அதைவிட பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட சாதனையை படைத்து வருகிறது.

இந்நிலையில், தியேட்டர் ஒன்றில் சமீபத்தில் ஹனுமான் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் சாமி வந்து ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. அந்த பெண்மணியை சமாதானம் செய்ய ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் முயல்வது மற்றும் ஹனுமானே வந்து விட்டார் என ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிடுவது உள்ளிட்டவை நடந்துள்ளன.

சமீபத்தில் வெளியான பிரபாஸின் “ஆதி புருஷ்” திரைப்படம் வெளியான போது திரையரங்கில் குரங்கு ஒன்று வந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டது. அதைப்போல, இயக்குநர் ஓம் ராவத் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு சீட்டை ஹனுமானுக்காக விட்டு விடுங்கள் என புரோமோஷன் ஸ்டண்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை உறுதி செய்யும் வகையில் பெண் ஒருவருக்கு சாமி வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.