காதலனை அறிமுகம் செய்து வைத்த கர்ணன் பட நாயகி… விரைவில் திருமணமாம்…!!!

0
31
The heroine of Karnan who introduced her boyfriend will get married soon

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து கலக்கிய நடிகைகள் ஏராளம். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான். அந்த வரிசையில் அண்மையில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரெஜிஷா விஜயன்.

The heroine of Karnan who introduced her boyfriend will get married soon 02

இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தார். இதையடுத்து ஜெய் பீம், சர்தார் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழில் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பிரபலமான ரெஜிஷா விஜயன்.

The heroine of Karnan who introduced her boyfriend will get married soon 03

தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நிலையில் திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அவர் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி தாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர்.

The heroine of Karnan who introduced her boyfriend will get married soon 04

இந்த புகைப்படங்களை பார்த்த மலையாள நடிகைகளும், ரெஜிஷாவின் தோழிகளுமான அஹானா கிருஷ்ணா, மமிதா பைஜூ ஆகியோர் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். இதன்மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளது. விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.