பெண் ரசிகைக்கு லவ் யூ சொல்லிய KPY பாலா… உயிரே என உருகிய சம்பவம்…. வைரலாகும் புகைப்படம்…!!!

0
38
The incident where Bala said I love you to a female fan and melted-01

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ சீசன் 6 என்கிற காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் KPY பாலா. மேலும் இவர் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு, பல ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.பின்னர் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் வெள்ளித்திரையுலும் நடித்து வருகிறார்.

The incident where Bala said I love you to a female fan and melted 02

பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை காட்டிலும் மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், 4 ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது, தன் கையில் இருந்த மொத்த பணத்தையும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The incident where Bala said I love you to a female fan and melted 03

இந்நிலையில் 40 வயது மதிக்க தக்க, பெண் ஒருவர் பாலாவின் தீவிர ரசிகையாக மாறி, அவரின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார். அந்த பெண் எதார்த்தமாக பாலாவை சந்தித்த போது தன்னுடைய கையை காட்ட, மிகவும் எமோஷ்னல் ஆன அவர், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு, உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

The incident where Bala said I love you to a female fan and melted 04

அதில் “நான் சமீபத்தில் ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன். அவர் தன்னுடைய கைகளில் என்னுடைய பெயரை டாட்டூ போட்டிருந்தார். நான் இதற்கு தகுதியானவனா என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்களை அதிகம் மதிக்கிறேன். மிகவும் நன்றி லவ் யூ ஸ்வீட் ஹார்ட். மிகவும் எமோஷ்னலாக உணர்கிறேன். மீண்டும் சொல்கிறேன் லவ் யு லாட்ஸ் உயிரே… என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.