வைரலாகும் “ஏ புள்ள” பாடலின் மேக்கிங் வீடியோ…. லால் சலாம் படத்தின் பாடல் மேக்கிங் விடியோவை வெளியிட்ட படக்குழுவினர்….

0
27
The making video of the viral song Ae Pulla has been released by the film crew of Lal Salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ”வை ராஜா வை” என்ற படத்தையும் இயக்கினார்.

The making video of the viral song Ae Pulla has been released by the film crew of Lal Salaam 02

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

The making video of the viral song Ae Pulla has been released by the film crew of Lal Salaam 03

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை வருகிற 9-ம் தேதி வெளியிடலாம் என பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

The making video of the viral song Ae Pulla has been released by the film crew of Lal Salaam 04

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும்பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முன்னதாக வெளியான இந்த படத்தின் ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.