இளம் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா…. எங்களால தாங்க முடியலையே…. புலம்பும் ரசிகர்கள்..!!

0
12
thrisha acting mother roll
thrisha acting mother roll

தமிழ் சினிமாவில் முதன்முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலமாக அறிமுகமானவர் திரிஷா.  சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களுடைய மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான ராணாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல்  திருமணத்தில் போய் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ரானா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

thrisha acting mother roll
thrisha acting mother roll

இந்த நிலையில் இதுவரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திரிஷா முதல் முறையாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். அதுவும் 39 வயது இளம் ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங் ஆக அமைந்துள்ளது.

thrisha acting mother roll
thrisha acting mother roll

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ப்ரோ டாடி  திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக வெளியானது. இந்த படத்தில் பிரித்திவிராஜ்க்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

thrisha acting mother roll
thrisha acting mother roll

இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க, அவருடைய மகனாக பிரித்விராஜ் ரோலில் ஷர்வானந்த் நடிக்க இருக்கிறார். மேலும் மீனா கேரக்டரில் திரிஷா நடிக்க இருக்கிறார். இதை கேள்விப்பட்ட த்ரிஷா ரசிகர்களும்  த்ரிஷா அம்மாவாக நடித்தது தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று புலம்பி வருகிறார்கள்.