நம்ம ஆண்டவர் பிள்ளைங்க சூப்பரூ…. But சூப்பர் ஸ்டார் பிள்ளைங்க ஐய்யையோ…. வளத்து விட்டும் கஷ்டம் தான் போங்க…!!

0
14
top celebrities siblings
top celebrities siblings

சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர் நடிகைகளும் தங்களுடைய வாரிசுகளையும் சினிமாவில் களமிறக்கி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அப்படி தங்களுடைய அம்மா, அப்பா பெரிய நடிகர், நடிகைகள் என்பதை பயன்படுத்தாமல் முன்னேறியவர்கள் யார் என்று பார்க்கலாம்.

top celebrities siblings
top celebrities siblings

கமலஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவருமே தன்னுடைய அப்பா அம்மா பெரிய நடிகர் என்று நினைக்காமல் அவர்களுடைய உதவி சிறிதளவும் இல்லாமல் சினிமாவில்  தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சௌந்தர்யா அப்படி கிடையாது. அப்பாவின் உதவியால் வாய்ப்பு பெற்று அவரை வைத்தே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்கள்.

top celebrities siblings
top celebrities siblings

சௌந்தர்யாவின் கேரியருக்காக பல கோடி செலவில் கோச்சடையான் படத்திலும் ரஜினிகாந்த் நடித்து உதவினார். அதேபோல ஐஸ்வர்யா  தனது கணவர் தனுஷை விட்டு தனியாக இருப்பதை நினைத்து அவர் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ என்ற ரோலில் நடித்து மார்க்கெட் உயர்த்தி உதவியிருக்கிறார். அப்பா ரஜினிகாந்த் இவருடைய கேரியரை போல திருமண வாழ்க்கையையும் சரியாக அமைத்து வைக்க முடியவில்லை என்று ரஜினி வருத்தமும் பட்டிருக்கிறார்.

top celebrities siblings
top celebrities siblings

அதேபோல சரத்குமார் மகள் வரலட்சுமி சினிமாவில் நடித்து வளரும் நடிகையாகவே பல வருடங்கள் இருந்து வருகிறார்.  அதேபோல அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனும் சினிமாவில் நடித்திருந்தாலும் நல்ல இடத்தை பிடிக்காமல் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.