கன்னட நடிகரை ஏமாற்றிய வெங்கட் பிரபு…. பிரபல நடிகரின் பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்….!!!!

0
28
Venkat Prabhu cheated on Kannada actor Fans are shocked by the famous actors post

பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களிலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் கிச்சா சுதீப் வைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தைப் பற்றிய கூடுதல் அப்டேட் எதுவும் இல்லை.

Venkat Prabhu cheated on Kannada actor Fans are shocked by the famous actors post 02

சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய கிச்சா சுதீப் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். “வணக்கம் அண்ணா நமஸ்தே, வெங்கட் பிரபுவுடன் மற்றும் அஸ்வத்தாமா அனுப் பண்டாரியுடன் நீங்கள் நடிக்கும் திரைப்படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்? என கேட்டுள்ளனர்.அதற்கு கிச்சா சுதீப் “வெங்கட் பிரபு காணாமல் போய்விட்டார், தற்போது விக்ரம் ரோனா இயக்கத்தில் தொடங்க உள்ள திரைப்படத்தில் நடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிலளித்தார்.

Venkat Prabhu cheated on Kannada actor Fans are shocked by the famous actors post 03

வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து “கோட்” படத்தை இயக்கி வருகிறார் , இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு விஜய்யுடன் “கோட்” படத்தில் கவனம் செலுத்தியதே கிச்சா சுதீப்புடனான படத்தை இயக்காததற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Venkat Prabhu cheated on Kannada actor Fans are shocked by the famous actors post 04

இதனால் வெங்கட் பிரபுவின் படம் தாமதமாக எடுக்கப்படும் அல்லது கிடப்பில் போடப்படும் என தெரிவித்துள்ளார். கோட் படத்திற்கு பிறகு கிச்சா சுதீப் படத்தை வெங்கட் பிரபு மீண்டும் இயக்குகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.