தங்கையுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு…. கண்கலங்கும் ரசிகர்கள்…!!!

0
29
Venkat Prabhu shared his last photo with his younger sister leaving fans in awe-01

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி பின்னணி பாடகரான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu shared his last photo with his younger sister leaving fans in awe 02

இதற்கிடையில் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிப்பட்ட பாவதாரணி, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதையொட்டி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Venkat Prabhu shared his last photo with his younger sister leaving fans in awe 03

பவதாரிணியின் இறுதிச் சடங்கின்போது, அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை அவரது குடும்பத்தினர் பாடிய வீடியோ பார்ப்பவர் மனதை கலங்கச் செய்வதாக இருந்தது. இந்த நிலையில் பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Venkat Prabhu shared his last photo with his younger sister leaving fans in awe 04

அதில் ”பவதா உடனான எங்களது கடைசி புகைப்படம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் வெங்கட் பிரபுவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் பார்ப்போரை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைக்கிறது மேலும் இப்புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.