சோனமுத்தா போச்சா…சிசிடிவி இருக்குறத மறந்துட்டியே… இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி…

திருடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. என்னதான் நாம் பல இடங்களில் சிசிடிவிக்களை பொறுத்தினாலும் அவர்கள் திருடுவதை விடவில்லை. சில பேர் சிசிடிவி இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் திருடுகிறார்கள். தற்பொழுதெல்லாம் பல வீடுகளில் சிசிடிவி வைப்பது வழக்கமாகி விட்டது. இருந்தாலும் இதுபோல் திருட்டு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சில இடங்களில் சிசிடிவிக்களை உடைத்தும், அதனை மறைத்தும் திருட ஆரம்பிக்கிறார்கள். சமீபத்தில் ஒருவர் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தார். உடனே ஒரு கடையில் மாட்டியிருந்த பல்ப்பை கழட்டி சட்டைக்குள் வைத்து சென்றார். இப்படி என்ன திருடுவது என்று கூட தெரியாமல் பல திருடர்கள் இருக்கிறார்கள். அப்படிதான் இங்கே இரண்டு திருடர்கள் ஒரு வீட்டில் இருக்கும் பேட்டரியை திருடியுள்ளனர்.
திருடிய பேட்டரியை வண்டியில் வைத்துக்கொண்டு அசால்ட்டாக சென்றுள்ளனர். ஆனால் அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் இருவரும் பதிவாகி மாட்டிக்கொண்டனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது…