‘எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’… முதன் முறையாக தன்னுடைய குழந்தையை காட்டிய VJ தியா மேனன்…
தொகுப்பாளினி தியா மேனன், “கிரேஸி கண்மணி” மற்றும் “கால்மேல காசு” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் இவர். மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது முதல் இவருடைய பணி ஆரம்பமானது. தொலைக்காட்சிகளில் [...]
Aug 27, 2022, 19:44 IST

தொகுப்பாளினி தியா மேனன், “கிரேஸி கண்மணி” மற்றும் “கால்மேல காசு” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் இவர். மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது முதல் இவருடைய பணி ஆரம்பமானது.
தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உள்ளார்கள், அதில் மிகவும் பிரபலமாவர் இவர். மேலும், தொகுப்பாளினி தியா மேனன் கடந்த 2016 -ஆம் ஆண்டு கார்த்திக் சுப்ரமையான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது, இந்த செய்தியை அவரே வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது குழந்தையுடன் சேர்ந்து இவருவரும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளனர்…