எதுக்கு இந்த கேள்வி உனக்கு ? பத்திரிக்கையாளரிடம் கோபப்பட்ட விஜய் சேதுபதி…!!!

0
68
vijay sethupathi gives a slipper shot reply to a reporter

சில படங்களில் சப்போர்டிங் கேரக்டராக நடித்து தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் மூலம் ஹீரோவானவர் விஜய் சேதுபதி. சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்தது மூலம் மக்களுக்கு தெரிந்த இவர்,பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூத்து காவும் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

Vijay sethupathi in vikram vedha

ஹீரோவாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த வர வில்லனாக நடிக்க தயங்கவில்லை. விக்ரம் வேதா படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்தார். இதன்மூலம் இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Vijay sethupathi in jawan

சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா படத்தில் நடித்து பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த விஜய் சேதுபதி மும்பைக்கர் படம் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கே வில்லனாக நடித்தார்.

vijay sethupathi angry at press meet

இப்போது ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் கத்ரினா கைப்புடன் நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ் பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பத்திரையாளரின் தேவையற்ற கேவியால் டென்ஷானாகி விட்டார் விஜய் சேதுபதி. அதாவது 75 வருடங்களாக நம் தமிழ்நாடும் நம் அரசியலமையும் ஹிந்தி எதிராக தான் உள்ளது. ஹிந்தி தெரியாது போடா என சொல்பவர்கள் நாம், நமக்கு ஹிந்தி மொழி அவசியமா என தேவையற்ற கெவியை மு வைத்தார்.

vijay sethupathi angry at press meet

இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, இது பிரஸ் மீட் இங்கு இந்த கேள்வி அவசியமா ? முதர்க்கு எதுக்கு இந்த கேள்வி உனக்கு, என்னிடம் இதற்கான பதிலை வாங்கி நீ என்ன செய்ய போகிறாய், நான் எதற்கு இதுக்கு பதில் சொல்ல வேண்டும் என டென்ஷானாகி விட்டார். மேலும், ஹிந்தியை திணிக்க தான் கூடாது, படிக்க வேண்டாம் என சொல்லவில்லை என தெளிவான பதிலை கொடுத்து அந்த பத்திரிகையாளரை ஆப் செய்து விட்டார் விஜய் சேதுபதி.