நான் சொல்றத முதல்ல கேளுங்க ; ஹிந்தி ஆடியன்ஸை கெஞ்சிய விஜய் சேதுபதி

0
40
vijay sethupathi kutty story to hindi fans

பீட்சா, சூத்து கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் மூலம் வில்லன் அவதாரமும் எடுத்தார். அதுமட்டுமல்லாது மலையாளம், தெலுகு என வேற்று மொழிகளிலும் நடித்து வந்தார்.

vijay sethupathi in merry christmas

இந்தநிலையில் தான் அவருக்கு பாலிவுட்டின் கதவுகளும் திறக்கப்பட்டது. மும்பைக்கர் என்ற படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பிரபல பாலிவுட் கத்ரினா கைப் இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில் இதன் ப்ரோமோஷன் பணிகள் ஜோராக நடந்து வருகிறது.

vijay sethupathi in merry christmas pressmeet

சென்னை மற்றும்  மும்பை நகரங்களில் ப்ரோமோஷன்கள் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் ஹிந்தி மீடியா பெட்டிகளில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தன் அமைதியான பேச்சால் அனைவரையும் ஈர்த்தார். குறிப்பாக நீங்கள் பெரிய ஸ்டார் இந்த மாதிரி படங்கள் தான் நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்ட போது, சம்பந்தமே இல்லாதது போல் ஒரு பதிலை கூற ஆரம்பித்தார்.

அவர் கூறியதாவது, நான் துபாயில் இருந்தபோது என் மனைவியை காதலித்தேன் என ஆரம்பிக்க அங்கிருந்த ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். உடனே முதலில் நான் சொல்வதை கேளுங்கள் என அன்பாக கூற ஆரம்பித்தார். நான் துபாயில் இருந்தபோது, இணையத்தின் வழியால் என் மனைவி எனக்கு அறிமுகமானார். நான் அவரை பார்த்தது கூட கிடையாது, சாட்டிங் மட்டும்தான். அவரிடம் பேச ஆரம்பித்த ஒரு வாரத்தில் நான் ஐ லவ் யூ கூட சொல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளலாமா என கேட்டுவிட்டேன்.

vijay sethupathi in merry christmas pressmeet

ஐந்து மாதங்கள் கழித்து எங்களுக்கு திருமணம் நடந்தது, அப்போது தான் நான் இங்கு வந்தேன். கல்யாணம் என்பது வாழ்க்கையின் பெரிய முடிவு அதற்கே நான் பயப்படவில்லை, பின் ஏன் நான் என் கேரியரில் பயப்பட போகிறேன் என கூற அங்கு கைதட்டல்கள் நீக்கவே இல்லை. விஜய் சேதுபதியின் பேச்சும், அமைதியான குணமும் அவர்களுக்கு பிடித்து போய்விட்டது.