இனி நான் அப்படி நடிக்க மாட்டேன்.. குண்டை தூக்கி போட்ட விஜய் சேதுபதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

0
43
vijay sethupathi says he wont play villain roles after this

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். வில்லனாக ஆரம்பித்து ஹீரோவாக உயர்ந்து, மீண்டும் வில்லனாக மக்களின் மனதில் நின்றவர்.

vijay sethupathi in master

ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி, பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, விக்ரம் படத்தில் கமல், மாஸ்டர் படத்தில் விஜய் என பெரிய பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வந்தார்.

vijay sethupathi in mumbaikar

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

vijay sethupathi in merry christmas

ஏற்கனவே மும்பைக்கர் படத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நடித்துள்ளார்.

vijay sethupathi in merry christmas interview

இதன் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து வரும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்துள்ளார்.

vijay sethupathi about playing villain roles

அவர் கூறியுள்ளதாவது, நான் நிறைய படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன், தொடர்ந்து அதே போல் நிறைய கதைகள் என்னிடம் வருகிறது. ஆனால் இனிமேல் நான் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை. நான் வில்லனாக நடிப்பதால், ஹீரோவாக நடிக்கும் படங்களின் பிசினஸ் பாதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்