சன் டிவிக்கு தாவிய விஜய் டிவியின் ஆஸ்தான நடிகை கேப்ரில்லா…!!!

0
20
Vijay TVs beloved actress Gabriella has jumped to Sun TV

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான “3” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரில்லா. அதன் பிறகு விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு பிக் பாஸ் 4 ஆவது சீசனில் பங்கேற்ற இவர் பிறகு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Vijay TVs beloved actress Gabriella has jumped to Sun TV 02

இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். இதில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்த இவர் இன்னும் ஒரு வருடத்தில் சீரியல் முடிவடைய உள்ள நிலையில், தற்போது அடுத்த சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

Vijay TVs beloved actress Gabriella has jumped to Sun TV 03

மேலும் அந்த புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அந்த சீரியலை வானத்தை போல் சீரியல் தயாரித்த நிறுவனம் தான் இந்தப் புதிய சீரியலையும் தயாரிக்கிறது. இந்த சீரியலில் ராகுல் ரவி ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் . இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே, நந்தினி போன்ற தொடர்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay TVs beloved actress Gabriella has jumped to Sun TV 04

சீரியலுக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. சீரியலின் ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும், இன்னும் அதி; நடிக்கும், நடிகை, நடிகைகள் எந்த மாதிரியான கதை வில்லன், வில்லி யார் என்ற முழு தகவல் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான அடுத்த அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.