குஷி ஜோதிகாவையே ஓவர் டேக் செய்த மடோனா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

0
31
Viral photos of Madonna tagging Khushi Jyotika

கேரளாவை சேர்ந்த மடோனா செபாஸ்டியன் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிரேமம் படத்துக்கு பின்னர் மடோனாவுக்கு கோலிவுட்டிலும் அதிகளவில் ரசிகர்கள் உருவாகினர். இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

Viral photos of Madonna tagging Khushi Jyotika-02

அந்த வகையில் தமிழில் அவர் முதன்முதலில் நடித்த படம் காதலும் கடந்துபோகும் இப்படத்தில் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். இதன்பின்னர் பா.பாண்டி, ஜுங்கா, கவண் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தார். பின்னர் கோலிவுட்டுக்கு ரெஸ்ட் விட்டு, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார் மடோனா.

Viral photos of Madonna tagging Khushi Jyotika-03

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த மடோனா தளபதி விஜய்யின் லியோ படம் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். லியோ படத்தில் இடம்பெற்ற சர்ப்ரைஸ் ஆன கேரக்டரில் மடோனா செபாஸ்டியனின் கேரக்டரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Viral photos of Madonna tagging Khushi Jyotika-04

இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மடோனா அவ்வப்போது போட்டோஸூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதன்வகையில் சமீபத்தில் மொட்டைமாடி ஒன்றில் சந்தன நிற புடவையில் செம கியூட்டாக போட்டோஸூட் எடுத்ததை பகிர்ந்துள்ளார் . அதனை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.