யார் அந்த குமாரி ஆண்ட்டி…. சாதாரண ரோட்டுக் கடைக்கு ஆதரவு கரம் நீட்டிய முதல்வர்… பின்னணி என்ன….???

0
35
Who is that Kumari aunty and what is the background of the CM who extended his support to the ordinary road shop

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாய் குமாரி. இவர் ஹைதராபாத்தில் ஐடிசி கோஹினூர் சர்கிள் பகுதியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர உணவு கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஹைதராபாத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த கடையில்தான் சாப்பிடுவார்கள்.

Who is that Kumari aunty and what is the background of the CM who extended his support to the ordinary road shop 02

இதனால் இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த கடை இருக்கும் பகுதியில் மட்டும் வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை உள்ளது. குமாரி ஆன்டி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் வாகனங்களை வழியிலேயே நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இந்த கடை ஆரம்பத்தில் சாதாரண கடையை போல்தான் வியாபாரம் இருந்தது.

Who is that Kumari aunty and what is the background of the CM who extended his support to the ordinary road shop 03

ஆனால் இன்ஸ்டாகிராம் உணவு பிரியர் ஒருவர் இந்த கடையில் உணவு சாப்பிட்டுவிட்டு அதை வீடியோவாக தனது சேனலில் பதிவிட்டிருந்தார். அது முதல் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளைக்கு அவருடைய கடைக்கு 500க்கு மேற்பட்டோர் வருகை தருகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தடுமாறினர். இதையடுத்து அடுத்த உத்தரவு வரும் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டனர்.

Who is that Kumari aunty and what is the background of the CM who extended his support to the ordinary road shop 04

இதனால் சாய் குமாரி என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினார். தான் எந்த தவறும் செய்யாத நிலையில் தனது கடையை ஏன் மூடினார்கள் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த விவகாரம் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சென்றது. அவர் போக்குவரத்து துறை டிஜிபியிடம் பேசி அந்த கடையை மூடும் உத்தரவுக்கு தடை விதித்ததோடு வழக்கு பதிந்திருந்தால் அதை நீக்கி விடுங்கள் என்றும் கூறியிருந்தார். ரேவந்த் ரெட்டியும் குமாரி ஆன்டியின் கடைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.