புது வாழ்க்கைக்காக சொந்த பிள்ளைகளை கொன்ற தந்தை.. சீனாவில் நடந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் கொடூர மரணம்…

0
24
The father who killed his own children for a new life the brutal death of two young children in China

சீனாவைச் சேர்ந்த ஜாங் போ – சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

The father who killed his own children for a new life the brutal death of two young children in China 02

இந்த நிலையில், தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து , ஜாங் யே செங்சென்னுடனான உறவை ஏற்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு உண்மை தெரிய வந்த நிலையில் இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.

The father who killed his own children for a new life the brutal death of two young children in China 03

2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஜாங் விசாரணையில்போது, “குழந்தைகள் விழுந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கீழே மக்கள் கூச்சலிட்டதைக் கண்டுதான் விழித்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

The father who killed his own children for a new life the brutal death of two young children in China 04

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சீனா உச்ச நீதிமன்றம், ஜாங் போ – யே செங்சென் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதனடிப்படையில், நேற்று இருவருக்கும் மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தந்தையே தன் குழந்தைகளை கொன்ற சம்பவம் சீன மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.